இந்திய அரசு உருக்கு தொழிற்சாலையில் (RINL) 319 பணியிடங்கள்

 இந்திய அரசு உருக்கு தொழிற்சாலையில் (RINL) 319 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 17 July 2021

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய அரசின் உருக்கு தொழிற்சாலையில் காலியாக உள்ள 319 பணியிடங்களை நிரப்புவதற்கான (Visakhapatnam Steel Plant (VSP) Recruitment 2021) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Vizag Steel: Rashtriya Ispat Nigam Limited | MADE EASY

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்கும் முன்பு இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

பணியிட விவரங்கள்:

1. ஃபிட்டர் FITTER – 75 பதவிகள்

2. டர்னர் TURNER – 10 பதவிகள்

3. மெசினிஸ்ட் MACHINIST – 20 பதவிகள்

4. வெல்டர் WELDER (Gas & Electric) – 40 பதவிகள்

5. மெக்கானிக் மெசின் லூல் மெயின்டனன்ஸ் Mechanic Machine Tool Maintenance (MMTM) – 20 பதவிகள்

6. எலக்ட்ரிசியன் ELECTRICIAN – 60 பதவிகள்

7. கார்பெண்டர் CARPENTER – 20 பதவிகள்

8. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கன்டிஷனிங் MECHANIC REFRIGERATION AND AIR CONDITIONING (R&AC) – 14 பதவிகள்

9. டீசல் மெக்கானிக் MECHANIC DIESEL – 30 பதவிகள்

10. கம்பியூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டண்ட் COMPUTER OPERATOR

AND PROGRAMMING ASSISTANT (COPA) – 30 பதவிகள்

மொத்த எண்ணிக்கை: 319 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்று  SCVT & NCVT கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01-10-2020 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

அன் ரிசர்வ் (யுஆர்), ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவுகளின் விண்ணப்பதாரருக்கு ₹ 200 (பிளஸ் ஜிஎஸ்டி @ 18%)

எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவுகளின் விண்ணப்பதாரருக்கு ₹ 100 (பிளஸ் ஜிஎஸ்டி @ 18%).

விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

செயல்முறை கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) அதாவது அப்டிட்யூட் மற்றும் டெக்னிகல் சோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

RINL இல் மேலே உள்ள பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் முதலில் https://apprenticeshipindia.org/ (NSDC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் / MSDE, GoI) பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்கண்ட இணையதளத்தில் வெற்றிகரமாக பதிவுசெய்த பிறகு கிடைக்கும் பதிவு எண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் www.vizagsteel.com> Careers> “Engagement of Trade Apprentices – 2020” Advt. No.: RINL/VSP/L&DC/Trade 2021(1) என்பதன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கப்பெற வேண்டிய கடைசிநாள்: 17-07-2021

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification)  டவுண்லோடு செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

Post a Comment

أحدث أقدم